பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு
பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு
ADDED : நவ 10, 2025 12:54 AM
சென்னை: 'இன்ஜினியரிங் கல்லுாரி கவுரவ பேராசிரியர்கள், பணி அனுபவ சான்றிதழ்களை, சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், வரும், 30ம் தேதி வரை பெறலாம்' என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பணியாற்றிய மற்றும் பணிபுரியும் பேராசிரியர்கள், தங்களின் பணி அனுபவ சான்றிதழ்களை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் சார்பில், சென்னை தரமணி மைய பாலிடெக்னிக் கல்லுாரி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, மாநில வணிக கல்வி பயிலகம், வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் அச்சு தொழில்நுட்ப பயிலக முதல்வர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். விண்ணப்பதாரர்கள் வரும், 30ம் தேதி வரை, பணி அனுபவ சான்றிதழ்களை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

