தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பேராசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பேராசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பேராசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


ADDED : செப் 16, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 07:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

'கல்லுாரி கல்வி இயக்குநராக, அரசு கல்லுாரியின் மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், நாளை கல்லுாரி கல்வி இயக்குனரகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை சார்பில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில், நேற்று பேச்சு நடந்தது.

பேராசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று, நாளை நடத்தவிருந்த முற்றுகை போராட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us