ADDED : மார் 12, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடந்த ஆண்டு மே மாதம், மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தலைமையில் நடந்த கூட்டத்தில், முதல்வரை விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து, முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, ராஜுவுக்கு எதிராக, மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணை முடியும் வரை தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜு மனுத்தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜரானார். அவதுாறு வழக்கு விசாரணைக்கு நீதிபதி தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்க போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

