ADDED : ஆக 29, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டம் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து, தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளிப்பர். தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து, கேள்வி எழுப்புகின்றனர். துாங்குபவர்களை எழுப்பலாம்; துாங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
அ.தி.மு.க.,வை ஆர்.எஸ்.எஸ்., வழி நடத்துவதில், எந்த தவறுமில்லை என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். அவரின் அந்த கருத்துக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
-சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

