டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு: மதுரை நோக்கி விவசாயிகள் பேரணி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு: மதுரை நோக்கி விவசாயிகள் பேரணி
ADDED : ஜன 07, 2025 12:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் தடையை மீறி மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் இன்று (ஜன.,07) பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்கள் வாகனங்களில் மதுரையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலூரில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

