'கவர்னரை நீக்க ஆர்ப்பாட்டம்': ம.தி.மு.க., கட்சியின் நிர்வாக குழுவில் தீர்மானம்
'கவர்னரை நீக்க ஆர்ப்பாட்டம்': ம.தி.மு.க., கட்சியின் நிர்வாக குழுவில் தீர்மானம்
ADDED : ஏப் 21, 2025 05:41 AM

'கவர்னர் பதவியில் இருந்து ரவியை நீக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், வரும் 26ம் தேதி, ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க., கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றின் விபரம்:
* இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை, அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து, கவர்னர் ரவிக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, கவர்னர் பதவியில் நீடிக்கும் தகுதியை ரவி இழந்து விட்டார். அவரை கவர்னர் பதவியில் இருந்து, ஜனாதிபதி நீக்க வேண்டும்
* வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, ஜனநாயக வழியில் போராடி, அதை முறியடிக்க வேண்டும்
* தமிழகத்தில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்
* தமிழக கவர்னரை நீக்கக் கோரியும், வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், ம.தி.மு.க., சார்பில் வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

