தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முகமூடி அணிந்து போராட்டம்

 முகமூடி அணிந்து போராட்டம்

 முகமூடி அணிந்து போராட்டம்


ADDED : ஜன 24, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல், பகுதிநேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 16ம் நாளாக 250க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கருணாநிதி, காமராஜர், காந்தி, விவேகானந்தர், நேதாஜி போன்ற தலைவர்களின் முகங்களை பிரதிபலிக்கும், முகமூடிகளை அணிந்து, நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் வாக்குறுதி எண். 181ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.

இதற்கிடையே, போராட்டத்தின் போது உயிரிழந்த, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த, பகுதி நேர ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு, அரசு நிதி வழங்காததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us