ADDED : பிப் 13, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு போக்குவரத்து ஊழியர்கள், மாநில முழுதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் உள்ள போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகங்களில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை பல்லவன் இல்லத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுகநயினார், பொருளாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

