ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்
ஐரோப்பிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட்
UPDATED : டிச 05, 2024 06:09 PM
ADDED : டிச 05, 2024 04:10 PM

சென்னை: ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், 'புரோபா - 3' செயற்கைக்கோள்களுடன், 'இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, 'புரோபா - 3' பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.