தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டவிரோத பிளாஸ்டிக் ஆலை பொது மக்கள் புகார் தரலாம்

சட்டவிரோத பிளாஸ்டிக் ஆலை பொது மக்கள் புகார் தரலாம்

சட்டவிரோத பிளாஸ்டிக் ஆலை பொது மக்கள் புகார் தரலாம்


ADDED : அக் 04, 2024 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, 2018 ஜூன் 25 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டி கைப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, சேமிப்பது, விற்பது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

நுாறு மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி., விளம்பர பதாகைகள், கரண்டி, கத்திகள், தட்டுகள், அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்களை, சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்துள்ளது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 240 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்குள், சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களை கண்டறியவது சவாலாக உள்ளது.

எனவே, சுற்றுச்சூழலில் அக்கறை உடைய மக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பவர்கள், சட்டவிரோத பிளாஸ்டிக் ஆலை குறித்த விபரங்களை, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம்.

அவர்களின் தொடர்பு விபரங்கள், tnpcb.gov.in/contact.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இ - மெயில், கடிதம், தொலைபேசி, வாட்ஸாப் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us