ADDED : அக் 15, 2024 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு தேர்வுகள் துறை இயக்குனர் லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து, தேர்வுகள் இயக்ககத்துக்கு கடந்த மாதம் 24ம் தேதி முதல் இம்மாதம் 15ம் தேதிக்குள் அளிக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
பட்டியலை இணைய தளத்தில் பதிவேற்றுவதில் சிக்கல்கள் இருந்ததாக சில தலைமை ஆசிரியர்கள் கூறி, கூடுதல் அவகாசம் கோரினர்.
அதை ஏற்று கடைசி வாய்ப்பாக, வரும் 25ம் தேதிக்குள் பெயர்ப்பட்டியலை பதிவேற்றும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.