/
செய்திகள்
/
தமிழகம்
/
கொடைரோடு -- வத்தலகுண்டு, சிவகாசி -- விருதுநகர் நான்கு வழியாக மாற்ற ரூ.2200 கோடி ஒதுக்கப்படும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் வேலு அறிவிப்பு

ADDED : ஏப் 02, 2025 03:02 AM
சென்னை:“மாநில நெடுஞ்சாலைகளை நான்கு மற்றும்இருவழிச் சாலைகளாக மாற்ற, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,” என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து, அமைச்சர் வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:
* 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்துதல், ஆற்றுப்பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள், 250 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், விருத்தாச்சலம் -- தொழுதுார் சாலை, கொடைரோடு -- வத்தலகுண்டு சாலை, சிவகாசி -- விருதுநகர் சாலை உள்ளிட்ட 220 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும், 550 கி.மீ., சாலைகள் இருவழிச் சாலைகளாகவும், 2,200 கோடி ரூபாயில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்
* அனைத்து காலநிலைகளிலும், தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டத்தின் கீழ், 84 தரைப்பாலங்கள், 466 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்
* துாத்துக்குடி -- வாஞ்சி மணியாச்சி ரயில்வே சந்திப்பை இணைக்க, 200 கோடி ரூபாயில் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படும்
* மதுரை பழங்காநத்தம், நாகர்கோவில் காவல்கிணறு, விருதுநகர் திருத்தங்கல், திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருவண்ணாமலை, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர், சென்னை அம்பத்துார், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், மேல்மருவத்துார் ஆகிய இடங்களில், 787 கோடி ரூபாயில், 10 ரயில்வே மேம்பாலங்களும், சேலம் -- கொச்சி சாலையில் மரப்பாலத்தில் கீழ்பாலமும் அமைக்கப்படும்
* திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே 18 கோடி ரூபாயில், நகரும் படிக்கட்டுகளுடன் நடை மேம்பாலம் அமைக்கப்படும்
* கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1,000 கி.மீ., நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள், 1,000 கோடி ரூபாயில், இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்
* விருதுநகர், ராஜபாளையம், கடலுார் புவனகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, நெல்லை களக்காடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தஞ்சை நாச்சியார் கோவில் உள்ளிட்ட 15 புறவழிச்சாலைகள், இணைப்புச் சாலை, மேம்பாலம் அமைக்க 3 கோடி ரூபாயில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* திருப்பூர் மாநகருக்கு புறவழிச்சாலை அமைக்கவும், துாத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், 3 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.