ADDED : அக் 29, 2024 01:09 AM
சென்னை : அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு:
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் - 4 நேரடி நியமன தேர்வு அறிவிப்பு, கடந்த ஜன., 30ல் வெளியிடப்பட்டது. ஜூன் 9ல் தேர்வு நடந்தது.
மொத்தம் 20 லட்சத்து, 36,774 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியோர், தங்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு, முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இன சுழற்சிக்கான தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், தேர்வாணைய நிர்ணய விகிதாசாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். அதன் விபரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

