தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாய் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்கு "தண்டனை': பள்ளிச் சிறுவர்கள் கோவையில் விபரீத முடிவு

நாய் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்கு "தண்டனை': பள்ளிச் சிறுவர்கள் கோவையில் விபரீத முடிவு

நாய் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்கு "தண்டனை': பள்ளிச் சிறுவர்கள் கோவையில் விபரீத முடிவு


UPDATED : ஆக 27, 2013 11:54 PM

ADDED : ஆக 27, 2013 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 11:54 PM ADDED : ஆக 27, 2013 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:பெற்றோரிடம் பலமுறை நாய்குட்டி கேட்டும், வாங்கி கொடுக்காததால், விரக்தியடைந்த பள்ளி மாணவர்கள் இருவர், கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு வெளியேறியனர்; மாணவர்களை மீட்ட போலீசார், இரண்டு நாய்குட்டிகளை வாங்கி கொடுத்து, மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

கோவை, ராமநாதபுரம், சவுரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த டர்னர் மற்றும் எலக்டீரிசியன் தொழில் செய்யும் இருவரது 14 வயது மகன்கள், ராமநாதபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். சிறு வயதிலிருந்து ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும், தங்களது வீடுகளில் செல்லமாக ஒரு நாய்குட்டி வளர்க்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையாம். இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் பலமுறை கேட்டும், அவர்களது ஆசை நிறைவேறவில்லை.ஒவ்வொரு முறை நாய்குட்டி கேட்கும்போதும், 'நாய்குட்டி எல்லாம் வாங்கி தரமுடியாது; ஒழுங்கா படிப்பில் கவனம் செலுத்துங்க' என்று பெற்றோர் கண்டிப்புடன் மறுத்துவிடுவது வழக்கம். பொறுத்து, பொறுத்து பார்த்த நண்பர்கள் இருவரும் விரக்தியடைந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்வது என்பதே அந்த அதிர்ச்சி முடிவாகும். திட்டப்படி இருவரும், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வது போல் கிளம்பினர். ஆனால், பள்ளிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றினர். பின், மதியம் நண்பர்களின் ஒருவரது வீட்டுக்கு சென்று துணிகளை மாற்றினர். தொடர்ந்து, தங்களது அம்மாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

கடித விவரம்:அன்புள்ள இரண்டு அம்மா அவர்களுக்கு, எங்கள் இருவருக்கும் வாழபிடிக்காததால், நாங்கள் சாக இருக்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களது கடைசி ஆசை எங்கள் இருவருக்காக இரண்டு வீட்டிலும் நாய்குட்டிகள் வளர்த்துங்கள். அதற்கு எங்களது பேரை வைத்து எங்களை வளர்த்ததுபோல் நினைத்து, அந்த நாயை வளருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் இருவரையும் ஒட்டுக்காக(ஒன்றாக) புதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக்கு அன்புள்ள மகன்கள்.என்று எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு கிளம்பினர்.

மாலை வீடு திரும்பிய பெற்றோர், மாணவர்களின் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் பள்ளி, விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் தேடியவர்கள், இறுதியில் கடிதத்துடன், ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், அதிகாரிகள் தகவல் கொடுத்து, மாணவர்களை தேடினர். இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகே இரண்டு மாணவர்கள் சுற்றி திரிந்ததை கண்ட போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நாய்குட்டி கிடைக்காத சோகத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டனர். தங்களுக்கு நாய்குட்டி வாங்கி கொடுத்தால், நன்றாக படிப்பதாக இருவரும் உறுதியளித்தனர். இதையடுத்து, தெற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர் ராமசந்திரன் அறிவுறுத்தலின் பேரில், ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், பேரூர் மெயின் ரோட்டிலுள்ள நாய் விற்பனையாளர் ஒருவரிடம், தலா 2,500 ரூபாய் கொடுத்து இரண்டு 'பொமரேனியன்' வகை நாய்குட்டிகளை வாங்கி மாணவர்களுக்கு பரிசாக அளித்தனர்.

நாய்குட்டி கிடைத்த மகிழ்ச்சியில் நண்பர்கள் இருவரும் எல்லையில்லா ஆனந்தமடைந்தனர். மேலும், தங்களுக்கு நாய்குட்டி பரிசளித்த போலீசாருக்கு, வரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வகுப்பில் முதலிடம் வாங்கி காட்டுவதாக சபதமிட்டு பெற்றோருடன் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us