ADDED : நவ 09, 2025 01:09 AM
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளில் முறைகேடு நடக்கும். தகுதி வாய்ந்த வாக்காளர்கள் ஓட்டு போட முடியாத சூழல் ஏற்படும் என தமிழக முதல்வர் கூறுகிறார். அவர் அப்படி கூறுவதற்கு முன், அதற்கான முக்கிய விபரங்களை சேகரித்து வைத்து, உண்மையின் அடிப்படையில் வெளியில் கருத்து சொல்ல வேண்டும். அதை விடுத்து, பொத்தாம் பொதுவாக குற்றம் சொல்வது, விமர்சிப்பது தவறு. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், ஆராய்ந்து பேச வேண்டும்.
தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறி உள்ளார். எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் என அவரிடம் தான் கேட்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தேவையானால், துாக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
- சரத்குமார், தேசிய குழு உறுப்பினர், பா.ஜ.,

