தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/100 ஆம்புலன்ஸ் கொள்முதல்

100 ஆம்புலன்ஸ் கொள்முதல்

100 ஆம்புலன்ஸ் கொள்முதல்


UPDATED : நவ 19, 2026 09:57 PM

ADDED : நவ 19, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 09:57 PM ADDED : நவ 19, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மருத்துவ சேவைகளுக்காக, 24.85 கோடி ரூபாய் செலவில், அடிப்படை உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய, 100 ஆம்புலன்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

தமிழகத்தில், 108 அவசர கால சேவை வழியே, 1,353 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. நீண்ட கால பயன்பாட்டில் உள்ள, பழைய வாகனங்களை, மருத்துவ சேவையில் இருந்து, அவ்வபோது விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதை ஈடு செய்ய, தேசிய நலவாழ்வுக் குழும நிதியின் கீழ், புதிய வாகனங்கள் வாங்க, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதை ஏற்று, தமிழக அரசு, புதிய ஆம்புலன்ஸ்கள் கொள்முதல் செய்ய, 24.85 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்நிதியில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில், 100 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள், குளிர்பதனப்பெட்டி பொருத்தப்பட்ட ஒரு அமரர் ஊர்தி, கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இவ்வாகனங்கள், திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் பெயரில் பதிவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக, 108 சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us