தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சர்க்கரை இருப்பு வைக்க கட்டுப்பாடு

சர்க்கரை இருப்பு வைக்க கட்டுப்பாடு

சர்க்கரை இருப்பு வைக்க கட்டுப்பாடு


UPDATED : நவ 19, 2026 09:53 PM

ADDED : நவ 19, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 09:53 PM ADDED : நவ 19, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் உள்ள வியாபாரிகள், சர்க்கரை இருப்பு வைக்க கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்து.

தமிழகம் உட்பட நாடு முழுதும், சர்க்கரை விலை உயர்ந்து வருவதால், பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, சர்க்கரை பதுக்கல் மற்றும் விலை உயர்வை தடுக்க, வியாபாரிகள் இருப்பு வைக்க வேண்டிய அளவு மற்றும் கால வரம்பை, மத்திய அரசு குறைத்துள்ளது; இதை பின்பற்றி, தமிழக அரசும் அரசிதழ் வெளி யிட்டுள்ளது.

அதன்படி, வியாபாரிகள் தங்களுக்கு கிடைக்கும் சர்க்கரை கையிருப்பை, 15 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது. இந்த காலவரம்பு முன், 30 நாட்களாக இருந்தது.

மேலும், ஒரு வியாபாரி வைத்திருக்க கூடிய அதிகபட்ச சர்க்கரை கையிருப்பு, 1,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டு உள்ளது.

இது முன், 2,000 குவிண்டாலாக இருந்தது. இந்த உத்தரவு கடந்த மாதம், 15ம் தேதி முதல் நடை முறைக்கு வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us