அமைச்சர் கீதா ஜீவனிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு
அமைச்சர் கீதா ஜீவனிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு
ADDED : பிப் 10, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் பிரசாத், பொதுச்செயலர் ஜான்சிராணி உள்ளிட்ட குழுவினர், நேற்று சென்னையில் சந்தித்தனர்.
இதுகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:
மாநிலத்தில் புதிதாக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே உதவித்தொகையை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, 2,000 ரூபாய் கொடுத்த பிறகே, வருவாய்த்துறை வழியாக வழங்கப்படும், 1,500 ரூபாய் உதவித்தொகையை நிறுத்த வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை தவிர்த்து, அனைத்து கோரிக்கைகளும், மூன்று மாதங்களுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் உறுதி கூறினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.