ADDED : அக் 28, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.சாலை த.வெ.க., மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நேற்று காலை முதல் மதியம் 12:00 மணிக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர்.
தொண்டர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிப்பதற்கு, மாநாட்டு திடலை சுற்றிலும், நெடுஞ்சாலை ஓரமாகவும், கியூ.ஆர்., கோடு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் தங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர்.
அவ்வாறு உறுதிப்படுத்திய தொண்டர்களுக்கு, கட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், எத்தனை பேர் மாநாட்டில் பங்கேற்றனர் என்ற விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினர்.

