''நல்லவர்கள் எல்லாம் இறங்குங்கள்'': மாஜி அமைச்சர் நாசர் பேச்சால் வேட்பாளர் அதிர்ச்சி
''நல்லவர்கள் எல்லாம் இறங்குங்கள்'': மாஜி அமைச்சர் நாசர் பேச்சால் வேட்பாளர் அதிர்ச்சி
ADDED : ஏப் 04, 2024 05:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஏப்.,3) திறந்த வேனில் ஆவடி எம்எல்ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான நாசர் தலைமையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பிரசார வாகனத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிகளவில் இருந்த நிலையில் அவர்களை எப்படி கீழே இறக்குவது என தெரியாமல் இருந்த நாசர், நல்லவர்கள் எல்லாம் வண்டியை விட்டு கீழே இறங்குங்கள், கெட்டவர்கள் எல்லாம் வண்டியில் ஏறுங்கள் என கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நாசரின் இந்த பேச்சு, வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

