ADDED : மே 08, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொது பல்கலை நுழைவுத்தேர்வான, 'கியூட்' எழுதுவோருக்கான தேர்வு மைய நகர பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான பொது பல்கலை நுழைவுத் தேர்வான, கியூட் தேர்வு, வரும் 13 முதல் ஜூன் 3 வரை நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைந்துள்ள நகரங்களின் பட்டியலை, தேசிய தேர்வு முகமை, 'https://nta.ac.in/' என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
அதில், ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ, 'cuet-ug@nta.ac.in' என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு எழுதுவோருக்கான, 'அட்மிட் கார்டு' வெளியிடும் தேதி குறித்த தகவல், 'https://nta.ac.in' மற்றும் 'https://cuet.nta.nic.in' என்ற இணையதளங்களில் வெளியிடப்படும்.

