ADDED : ஆக 13, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் சுஜாதா மறைவு காரணமாக, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்த ராகுல் வீடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சி, நேற்று ரத்து செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்தவர் சுஜாதா. தமிழக காங்கிரஸ் துணை தலைவராகவும் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக, சுஜாதா நேற்று காலையில் மரணம் அடைந்தார். அதனால், தமிழகம் முழுதும் நேற்று நடக்கவிருந்த காங்., கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பா.ஜ., சூழ்ச்சிகள் குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விளக்கி பேசும் வீடியோவின் தமிழாக்கத்தை ஒளிபரப்பும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடப்பதாக இருந்தது. சுஜாதா மறைவு காரணமாக, அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப் பட்டது; இன்று நடக்கிறது.

