பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
ADDED : செப் 26, 2026 05:44 PM

திருநெல்வேலி: '' யார் என்ன கூறினாலும் லோக்சபா தேர்தலில் முதல்வர் விஜய், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்'' என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. எனவே அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட யார் என்ன கூறினாலும் 2029 லோக்சபா தேர்தலில் முதல்வர் விஜய், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்.
தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியின்றி எந்த தொழில் துறையும் முன்னேற முடியாது. அதேநேரத்தில் அதில் உள்ள குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 60 ஆண்டுகளைப் போல் இல்லாமல், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு கல்லுாரிக்கு ஒரு தொழிற்சாலை என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு பயிற்சியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
