UPDATED : ஜன 10, 2024 06:35 PM
ADDED : ஜன 10, 2024 11:07 AM

புதுடில்லி: ராகுலின் 2வது யாத்திரை மணிப்பூரில் ஜன.,14ல் துவங்க உள்ள நிலையில், அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
வரும் 14ல் மணிப்பூரில் துவங்கி, மார்ச் 21ல் மும்பையில் நிறைவடைய இருக்கும் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தலைமையிலான யாத்திரைக்கு, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என, பெயரிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா காங்ஜெய்புங்கில் இருந்து யாத்திரையை துவக்க காங்கிரஸ் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. ராகுலின் 2வது யாத்திரைக்கு காங்கிரஸ் இன்னும் அனுமதி பெறவில்லை.

மணிப்பூர் முதல்வர்
இது குறித்து, ‛‛யாத்திரைக்கு அனுமதி அளிப்பது தீவிர பரிசீலனையில் இருக்கிறது. யாத்திரைக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதன் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்'' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.
அனுமதி
அடுத்த சில மணிநேரத்தில், ராகுல் யாத்திரைக்கு மணிப்பூர் அரசு பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அரசு வெளியிட்ட அறிவிப்பில் ராகுல் யாத்திரை துவக்க நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலரே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

