ADDED : பிப் 18, 2024 02:25 AM
தஞ்சாவூர் : இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் நேற்று தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்தனர்.
போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்து, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன், உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.