ADDED : நவ 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ரயில்வே 'குரூப் டி' பணியாளர் தேர்வில் பங்கேற்போர், தங்களின் ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என, ஆர்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், உதவியாளர், பட்டறை உதவியாளர், வேகன் உதவியாளர், லோகோ ஷெட் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு, நேற்று முன்தினம் துவங்க இருந்தது.
ஆனால், திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 27 முதல் ஜன., 16ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என, வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வுகள், ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடன் நடப்பதால், தேர்வர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் என, ஆர்.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

