உள்ளடக்கத்திற்கு செல்ல

3 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் ரயில்வே ஒப்புதல்
3 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் ரயில்வே ஒப்புதல்
ADDED : மார் 08, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை - கோவை உட்பட, மூன்று விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் விரைவு ரயில் புதுக்கோட்டையிலும், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி விரைவு ரயில் போத்தனுாரிலும், சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் திருவள்ளூரிலும் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக ரயில்வே அமைச்சருக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன் நன்றி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
