ADDED : ஆக 29, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்த ஆண்டு தீபா வளி பண்டிகை, வரும் அக்., 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல், இந்த ஆண்டும் தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய, சில நிமிடங்களில் முடிந்து விட்டன. சிறப்பு ரயில்களுக்காக பயணியர் காத்திருக்கின்றனர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில், செங்கல்பட்டு - திருநெல்வேலி, சென்ட்ரல் - கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில், 11 சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.