sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

/

 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்


ADDED : பிப் 27, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தலா, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, சிற்றாறு பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலையில், இன்று அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகாலையில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us