மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
ADDED : ஜன 15, 2026 02:08 AM

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை மாவட்டங்களில், இன்று மித மான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய இடங்களில், தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஆகிய இடங்களில் தலா, 5; புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப் படுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட் டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

