தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்றும், நாளையும் சில இடங்களில் மழை

இன்றும், நாளையும் சில இடங்களில் மழை

இன்றும், நாளையும் சில இடங்களில் மழை


ADDED : ஜூலை 29, 2025 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில், இன்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us