உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 09, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியிலும், கூடங்குளம், ராதாபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், துாத்துக்குடி மாவட்டத்தில் பன்னம்பாறை சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.
