sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

/

 தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


ADDED : பிப் 01, 2026 06:15 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

லட்சத்தீவு - கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில், வரும் 6ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 3ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்களிலும், 6ம் தேதி, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், அதிகாலை நேரங்களில், வரும் 4ம் தேதி வரை பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us