உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 06:49 PM
ADDED : அக் 10, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை, நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், வரும் 13 முதல் 15ம் தேதி வரை, தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 16ம் தேதி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
