தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


UPDATED : அக் 08, 2026 07:24 PM

ADDED : அக் 08, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:24 PM ADDED : அக் 08, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல், 0.9 கி.மீ., உயரத்தில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதிலிருந்து தெற்கு உள்கர்நாடகா வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. அதனால், இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.

துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு, அதிகாலை நேரங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us