ADDED : ஏப் 13, 2025 06:30 AM

சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டி, மதுக்கூரில் தலா 8 செ.மீ., மழை பெய்து உள்ளது.
நெய்வாசல் தென்பாதி, காரைக்குடி, ஒரத்தநாடு, மன்னார்குடி, கீரனுார், தண்டராம்பேட்டையில் தலா 7 செ.மீ., மழையும், திருமானுார், குருவாடியில் தலா 6; ராமேஸ்வரம், அறந்தாங்கி, பேச்சிப்பாறையில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.