தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மழை

இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மழை

இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மழை


ADDED : ஜூலை 12, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, மயிலாடுதுறை தரங்கம்பாடி, சென்னை கொரட்டூர், விம்கோ நகரில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 15 முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று அதிகபட்ச வெப்ப நிலை, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க கூடும். இதனால், பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us