தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை

இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை

இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை


ADDED : செப் 20, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில் சில பகுதிகளில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:


நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 17; திருப்பத்துார் தானியங்கி வானிலை நிலையம், வடபுதுப்பத்து, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா, 16; திருப்பத்துார் வாணியம்பாடி, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், செப். 25 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும. சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us