பழனிசாமி அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்குமா?
பழனிசாமி அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்குமா?
ADDED : ஜூன் 12, 2025 04:31 AM

கடந்த 2014ம் ஆண்டு பா.ஜ. மத்தியில் ஆட்சி பொறுப்புஏற்றது முதல் தற்போது வரை 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி, மூலதன செலவுக்கு மட்டும் ரூ.112 லட்சம் கோடி வழங்கியுள்ளார். 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்த அரசு முக்கியத்துவம் தருகிறது. சுகாதாரத்துறைக்கும் நிறைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும், ஜி.எஸ்.டி., தவிர பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தனியாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்து பழனிசாமி தலைமையில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமையப் போகிறது. இதில் எவ்வித மாறுபாடும் இல்லை. அதாவது, பழனிசாமி முதல்வராவார். அவருடைய அமைச்சரவையில் பா.ஜ., இடம் பெறுவது குறித்து, அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
-நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,