501 இடங்களில் மழைநீர் அகற்றம்; 41 இடம் இன்னும் பாக்கி; சொல்கிறது சென்னை மாநகராட்சி!
501 இடங்களில் மழைநீர் அகற்றம்; 41 இடம் இன்னும் பாக்கி; சொல்கிறது சென்னை மாநகராட்சி!
UPDATED : அக் 16, 2024 09:43 PM
ADDED : அக் 16, 2024 09:13 PM

சென்னை: சென்னையில் 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் 501 இடங்களில் நீர் அகற்றப்பட்டது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த நிலையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: சென்னையில் 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 41 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6,963 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.