பெண்ணாடம், திட்டக்குடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
பெண்ணாடம், திட்டக்குடி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
ADDED : டிச 14, 2024 04:02 AM

பெண்ணாடம்: தொடர் மழை காரணமாக, பெண்ணாடம், திட்டக்குடியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொடர் கனமழை காரணமாக, இங்குள்ள ஓடை, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஊருக்குள் புகுந்தது. இதனால், கிராமத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று அதிகாலை மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
இதேபோன்று, பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுார், பெ.பூவனுார், காரையூர், சவுந்திரசோழபுரம், திட்டக்குடி அடுத்த கூடலுார், ஆவினங்குடி, அருகேரி, கோடங்குடி, மருதத்துார், தொளார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரை அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

