UPDATED : நவ 30, 2024 03:40 PM
ADDED : நவ 30, 2024 03:37 PM

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டை வெள்ளநீர் சூழ்ந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கருணாநிதி வீட்டையும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.