தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விழிப்புணர்வு ஏற்படுத்துக: உயர்நீதிமன்றம் உத்தரவு

 விழிப்புணர்வு ஏற்படுத்துக: உயர்நீதிமன்றம் உத்தரவு

 விழிப்புணர்வு ஏற்படுத்துக: உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 14, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்கள் விற்பனைக்கான ஏலம் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான நிர்வாகிகளில் சிலர் ஜாமினில் வெளியே வந்தனர். ஜாமின் உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே விசாரணையின்போது அரசு தரப்பு,' நிறுவனத்திற்கு சொந்தமான 10 ஆயிரத்து 158 காலி மனையிடங்கள் விற்பனை செய்யப்படும்' என தெரிவித்தது. நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: நிறுவனத்தின் ரூ.7ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்நிலங்களை ஏலத்தில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனின் முன்பதிவு செய்ய இணையதள வசதி ஏற்படுத்திய நிறுவனம் ரூ.1000 கட்டணம் வசூலிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 60 பேர், தனிநபர்கள் 200 பேர் ஏலத்தில் பங்கேற்க முன் பதிவு செய்துள்ளனர் என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் முன்பதிவு குறைவாக உள்ளது. கடைசி நேரத்தில் முடிவு செய்யலாம் என்ற மனநிலை உள்ளது. இது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விசாரணை மார்ச் 17க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us