ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு
ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு
ADDED : பிப் 14, 2025 12:18 AM
சென்னை:அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த கதர் துறை பறிக்கப்பட்டு, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சரவை, 2024 செப்டம்பர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி, ராஜ கண்ணப்பன், மதிவேந்தன் ஆகிய ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு, பால் வளம் மற்றும் கதர் துறைகள் ஒதுக்கப்பட்டன.
பொன்முடியிடமிருந்த உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராஜ கண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் காதி துறை பறிக்கப்பட்டு, பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரவி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.