ADDED : ஜூன் 17, 2025 12:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி மலையடிவாரத்திலுள்ள சர்வேஸ்வரர் கோயிலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் இரவு தியானத்தில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்திற்கு வந்திருந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கூட்டம் முடிந்த பின்பு இரவு 10:00 மணிக்கு சர்வேஸ்வரர் கோயிலுக்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். அங்குள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின் சிவலிங்கத்தின் அடியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையவும், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

