ADDED : அக் 04, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி வீடு திரும்பினார்.
ரஜினி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது அடிவயிற்றில் ரத்தநாளம் பெரிதானதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. உடல் நிலை சீரானதை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
தான் நலம்பெற வாழ்த்திய அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.