'கருணாநிதி 100' விழாவில் ரஜினியின் பேச்சு: சிவாஜியின் பழைய பேச்சு ட்ரெண்டிங் ஆச்சு!
'கருணாநிதி 100' விழாவில் ரஜினியின் பேச்சு: சிவாஜியின் பழைய பேச்சு ட்ரெண்டிங் ஆச்சு!
UPDATED : ஜன 08, 2024 03:27 PM
ADDED : ஜன 08, 2024 12:40 PM

சென்னை: சென்னையில் நடந்த 'கருணாநிதி 100' விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜிகணேசனை கருணாநிதி தான் உருவாக்கினார்' என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்பு கருணாநிதி பற்றி, சிவாஜிகணேசன் பேசியது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரஜினி மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜன.,6) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை கருணாநிதி உருவாக்கி இருப்பார்.'' எனப் பேசியிருந்தார்.
ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: மிஸ்டர் ரஜினி காந்த்! ஏதோ 'கருணாநிதி 100' விழாவுக்கு போனோமா, கருணாநிதியை பற்றி பேசினோமா.. உங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் எதையும் செய்து கொண்டு போகலாம்.. அதை பற்றி கவலை இல்லை.. ஆனால் எம்ஜிஆர், சிவாஜியையே உருவாக்கியது கருணாநிதி தான் என பேசியது உங்களுக்குள் ஏதோ சிஸ்டம் சரியில்லை என நிரூபணம் ஆகிறது.
உருவாக்கியது கருணாநிதியா?
எம்ஜிஆர் பற்றி நான் சொல்லப் போவதில்லை. அது திராவிடத்தின் இன்னொரு கூறு. அதை அவங்க பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் சிவாஜியை உருவாக்கியது கருணாநிதியா? படத்தை உருவாக்கியது, இயக்கியது, கதை எல்லாம் எவரோ செய்தது; வசனம் மட்டும் சம்பளம் வாங்கி எழுதியதால் சிவாஜியை உருவாக்கி தந்துவிட்டாரா? அப்போ கருணாநிதி வெற்றிச் சித்திரம் எவை? கருணாநிதிக்கு புகழ் வந்ததே பராசக்தி மூலம் தான். அதன் பின் மனோகரா உச்சம் தொட்டது. அவை இரண்டுமே சிவாஜியின் நடிப்பும் வசனம் பேசியதும் தான்.
ஏன் நடிக்கவில்லை
கருணாநிதி எழுதியது அவ்வளவு உயர்வு என்றால் அவரது வசனத்தில் ஒரு படம் கூட ரஜினி ஏன் நடிக்கவில்லை? உளியின் ஓசை அல்லது கருணாநிதி ஆசையாக எழுதிய வாலிப விருந்து படத்தில் ரஜினி நடித்து இருக்கலாமே.. அவர் மட்டும் நடிக்க மாட்டாராம்.. ஆனால் எல்லோரையும் அவர் தான் உருவாக்கினார் என பேசுவாராம்.. நல்லவேளை ரஜினி சார்.. நீங்க அரசியலுக்கு வரவில்லை... உங்களை எதிர்பார்த்த நாங்க தப்பித்தோம். இவ்வாறு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
சிவாஜியின் பதிலடி
பல ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி பற்றி, நடிகர் சிவாஜிகணேசன் அளித்த பேட்டியின் தொகுப்பு தற்போது வைரலாகியுள்ளது. அதில் சிவாஜி கூறியிருப்பதாவது: கருணாநிதி இப்போது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் கருணாநிதி தனியாக விமர்சனம் செய்கிறார். எங்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது.