ADDED : நவ 23, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கத்தினர், சென்னை, எழும்பூர் எல்.ஜி., சாலையில் இருந்து நேற்று பேரணியாக, தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர்.
அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணியில் கலந்து கொண்டோர், அரசுக்கு எதிராகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

