ADDED : மார் 20, 2024 06:11 PM

பாஹிலா என்பவர் நீண்ட நாள் கழித்து நபிகள் நாயகத்தை சந்தித்தார். அவரை பார்த்தவர், ''உமக்கு என்ன நேர்ந்தது? கடந்த முறை பார்த்த போது நல்ல தோற்றத்துடன் இருந்தீர்கள். இப்போது இப்படி இளைத்து விட்டீரே'' எனக் கேட்டார் நாயகம்.
''தொடர்ந்து நோன்பு நோற்கிறேன். தினமும் இரவில் மட்டும் சாப்பிடுகிறேன்'' என்றார். ''உங்களை நீங்களே வேதனையில் ஆழ்த்திக் கொண்டீர்கள். தொடர்ச்சியாக நோன்பு நோற்று மெலிந்து விட்டீர்'' என பின்வரும் கட்டளையை அவருக்கு இட்டார். ''ரம்ஜான் நோன்புகளைத் தவிர ஒவ்வொரு மாதமும் ஒருநாள் நோன்பு நோற்றுக் கொள்ளும்'' என்றார். அதற்கு பாஹிலா, ''நோன்பு நோற்பதற்கு எனக்கு வலிமை இருக்கிறது. எனவே நோன்பிருக்கும் நாட்களை சற்று அதிகப்படுத்துங்கள்'' எனத் தெரிவித்தார்.
''சரி. ஒவ்வோர் ஆண்டும் அஷ்ஹுருல் ஹுர்மு எனும் கண்ணியம் மிக்க நான்கு மாதங்களில் (ரஜப், துல்ஹாதா, துல்ஹஜ், மொகரம்) நோன்பு வையுங்கள்'' என்று கூறி அனுப்பினார்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி

