ADDED : மார் 11, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரம்ஜான் மாதத்தை கண்ணியம் நிறைந்த மாதம் என்கிறார் நபிகள் நாயகம்.
இந்த மாதத்தின் பெருமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.இந்த மாதத்தில் தான் 'லைலத்துல் கத்ர்' என்னும் மகத்தான இரவு வருகிறது. இந்த நாளில் தான் குர்ஆன் என்னும் வேதம் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது. நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரம்ஜான். இந்த மாதத்தில் இறைவனின் அருளைப் பெற நோன்பிருக்க வேண்டும்.'ரமல்' என்றால் 'கரித்தல்'. நோன்பிருந்து பாவங்களை சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம். இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய, பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். எனவே ஆனந்தமாக ரம்ஜான் நோன்பை துவங்குவோம்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி

